புளியங்குடியில் வன விலங்கை வேட்டையாட முயன்றவர் கைது

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 20:01

தென்காசி மாவட்டம் புளியங்குடி  வனப்பகுதிக்கு உட்பட்ட நாரணபுரம் பீட் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 நபர்களில் ஒருவரை கைது செய்து வனத்துறையினர் அபராதம் விதித்தனர். தப்பி ஓடிய 2 நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்..

தென்காசி மாவட்டம் புளியங்குடி வன சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நாரணபுரம் பீட் பகுதியில் ராயகிரி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் முனீஸ்வரன் மற்றும் இரண்டு நபர்கள் ஆயுதங்களுடன் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றுள்ளனர். அப்போது ரோந்து பணி சென்ற வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றபோது இருவர் தப்பி ஓடிய நிலையில் முனீஸ்வரன் பிடிபட்ட நிலையில் அவருக்கு அபராதமாக ரூபாய் 20 ஆயிரம்  விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் தப்பி ஓடிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதையடுத்து வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது வனஉயிரி பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.