மீனாட்சியம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 19:42

 மதுரையில் 4 முக்கிய கோவில்களில் வரும் 8ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா 3ஆம் அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில்,

 திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்*

 மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஆடிமாத திருவிழா நடைபெறகூடிய நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துவருவதால் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆலோசனை நடத்தினார்.