சென்னையில் குறைந்த கட்டணத்தில் டயாலசிஸ் செய்ய போரூரில் புதிய மையம்

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 17:48

சென்னை

சென்னையில் குறைந்த கட்டணத்தில் டயாலசிஸ் செய்ய போரூரில் புதிய மையம் திறக்கப்பட்டுள்ளது.

 

குறைந்த கட்டணத்தில் டயாலிசிஸ் மேற்கொள்வதற்காக சத்யலோக் சாரிட்டபிள் டிரஸ்ட் டயாலிசிஸ் சென்டர் சென்னை போரூரில் தொடங்கப்பட்டுள்ளது.

சத்யலோக் சாரிட்டபிள் டிரஸ்ட்டுடன் இணைந்து ரோட்டரி கிளப் ஆப் சென்னை கேபிடல் மற்றும் மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த மையத்தை உருவாக்கியுள்ளன, இதனை டேங்கர் பவுண்டேசன் என்ற அமைப்பு நிர்வகிக்கிறது,

இந்த திட்டத்திற்கு பிரபல தொழிலதிபர் சஞ்சய் லுல்லா உள்ளிட்டோர் நிதி உதவியுடன்  3 கோடி ரூபாய் செலவில்  5000 சதுர பரப்பளவில்  இதில் கட்டிடம் கட்டப்பட்டு 20 படுக்கைகளுடன் கூடிய  டயாலிசிஸ் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோட்டரி கிளப் ஆப் சென்னை கேபிடல் தலைவர் ராஜீவ் சம்பத், மற்றும் மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 அமைப்பின் தலைவர் துஷ்யந்த் மெஹ்ரா ஆகியோர் கூறுகையில்

சென்னை நகரம் சர்க்கரை நோயின் தலைநகராக மாறி விட்டது. இந்த நிலையில் டயாலிசிஸ் சேவை மையங்களின் தேவை அதிகரித்து வருகிறது.  வாரந்தோறும் டயாலிசிஸ் சேவை மேற்கொள்ள ஏழைகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு  இந்த மையத்தின் மூலம் 15 ஆயிரம் பேருக்கு ஆண்டுதோறும் டயாலிசிஸ் சேவை வழங்க முடிவெடுத்து இருக்கிறோம், இலவசமாக டயலாசிஸ் செய்வது குறித்தும் திட்டங்கள் தீட்டி வருகிறோம் என்றார் அவர்