விதிமுறை மீறல் : ஜவுளிக் கடைக்கு அபராதம்

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2021 17:18

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை மீறிய ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் வியாபாரம் நடப்பதாக மாநகராட்சிக்கு வந்த புகாரை தொடர்ந்து ஆணையர்  ஆஷா அஜித்  உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள்  ஞானப்பா, முருகன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது செம்மாங்குடி பகுதியில் அரசின் தடையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு  அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.