திருவில்லிபுத்தூரில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை கொள்ளை

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 17:49

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தன்யா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (37). இவர் திருவில்லிபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

நேற்று ஆசிரியர் ஸ்ரீராம் தேர்தல் பணிகளுக்காக, ராஜபாளையம் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று விட்டார். வீட்டிலிருந்த ஸ்ரீராமின் மனைவி சந்தானலட்சுமி, கணவர் வீட்டில் இல்லாததால் வீட்டை பூட்டிவிட்டு அருகிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிய சந்தானலட்சுமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சந்தானலட்சுமி திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.