கன்னியாகுமரி திருவேனி சங்கமத்தில் கடைகள் கட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை

பதிவு செய்த நாள் : 17 மார்ச் 2021 20:09

மதுரை,

கன்னியாகுமரி திருவேனி சங்கமத்தில்  கட்டப்பட்டு வரும்  கடைகள் கட்டுமான பணிகளை தொடர கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு இது குறித்து  இந்து அறநிலையத்துறை ஆணையர்,  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து  உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு.

குமரி  பலவேசமுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :

இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய 3 கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடம் முக்கடல் சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திருவேனி சங்கமத்தில்,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வணிக நோக்கில் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. விதிமுறைபடி திருவேனி சங்கமத்தில்  கடைகள் கட்டக்ககூடாது.  

கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ளது. மேலும் நிரந்தர கடைகள் கட்டுமானம் நடைபெறுவதால், முக்கடல் சங்கமத்தில் இருந்து பக்தர்கள் கமாகோடி பீடம்,  விவேகானந்தர் கோவில்,  சுனாமி நினைவிடம் உள்ளிட்ட தலங்களை பக்தர்கள்,  சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாது.  

எனவே, கன்னியாகுமரி திருவேனி சங்கமத்தில, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வணிக நோக்கில்  கட்டப்பட்டு வரும்  கடைகளை கட்ட தடை விதித்து கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என மனுவில்  கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  நீதிபதிகள் கூறுகையில், கன்னியாகுமரி திருவேனி சங்கமத்தில்,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை தொடர கூடாது, என உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்,  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.