தென்னிந்திய திரைப்பட நடிகை ஷாம்னா காசிம் மதுரை விமான நிலையத்தை பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 17:55

மதுரை விமான நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன் வருகை தந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஷாம்னா காசிம் மதுரை விமான நிலையத்தை பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார், இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் பயணிகளுக்கு பிடித்தமான விமான நிலையம் எது என்ற கணக்கெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மதுரை விமான நிலையம் இந்தியாவில் இரண்டாம் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்திற்கு வந்த தென்னிந்திய திரைப்பட நடிகை ஷாம்னா காசிம் மதுரை விமான நிலையத்தின் சேவை குறித்து பேசிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

அந்த வீடியோ காட்சியில் நடிகை ஷாம்னா காசிம் கூறியதாவது: 

மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் துணிச்சலாக இருப்பதும், விமானத்தின் வளாகங்களை தூய்மையாக வைத்திருப்பதும் சிறப்பாக உள்ளது மேலும் வளாகத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள சிறு கடைகள் இருப்பது சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.