சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 16:45

சிவகங்கை,

திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் மற்றும் வருவாய்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி கல்லூரியில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக அண்ணாசிலை, மதுரை ரோடு, காந்தி சிலை, பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

அதனைத் தொடர்ந்து கல்லூரியில் மாணவர்களிடையே  தேர்தல் பற்றிய விழிப்புணர்வு விளக்க உரையை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். பின்பு வாக்களிக்கும் இவிஎம் மிஷினில் வாக்களிக்கும் முறை பற்றியும் எடுத்துரைத்தார் இரண்டு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து மாணவர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் உட்பட கையெழுத்து இட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தபால் ஓட்டு முறை அவசியம் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிந்து, வட்டாட்சியர் ஜெயந்தி, தேர்தல் துணை வட்டாட்சியர் கமலகண்ணன், மண்டல துணை வட்டாட்சியர் சுமதி, பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.