மாசிமாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 16:41

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அய்யம்பட்டியில் உள்ள கழுங்கு முனீஸ்வரர் ஆலய மாசி மாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 15 காளைகளும் 140 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  சிறந்த காளைகளை, 9 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி 25 நிமிட நேரத்துக்குள் காளையை அடக்கினர். அடங்காத காளைகளுக்கும் அடக்கிய வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் முடிவின் போது பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.