திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவத்தினரிடம் மத்திய இணை அமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல் வி. கே.சிங் கலந்துகொண்டு முன்னாள் ராணுவத்தினருடன் கலந்துரையாடினார்.
அவர் பேசியதாவது,
பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டு எல்லைகளில் பணிபுரியும் ராணுவத்தினரின் கை விலங்குகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்த பின்புதான் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
தற்போது அந்த நிலை மாறி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல ராணுவத்தினர் உயர் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. ராணுவத்தினருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கும் இதேபோல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சாதகமாக பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதை முன்னாள் ராணுவத்தினரான நீங்கள் அனைவரிடமும் கொண்டு சென்று வரும் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிக தொகுதிகளை கேட்டு குறைந்த தொகுதியில் வெற்றி பெறுவதைவிட 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக 20 தொகுதிகளையும் வெல்லும் என்று பேசினார்.