மானாமதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்த வாலிபர் வெட்டி கொலை

பதிவு செய்த நாள் : 05 மார்ச் 2021 19:41

சிவகங்கை,

மானாமதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்த வாலிபர் வெட்டிக் கொலை. போலீசார் விசாரணை. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பயணியர் விடுதி எதிரேயுள்ள தெருவைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் அக்னி ராஜ்  (23) .பழைய வழக்கு ஒன்றில் மானாமதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.


அதே போல் இன்று காலை மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பைக்கில்  திரும்பி வரும்பொழுது காவல் நிலையம் அருகேயே மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி ராஜராஜன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். மேலும் வாலிபரின் சடலத்தை கைப்பற்றிய மானாமதுரை போலீசார் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் கூறினார். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.