ராஜபாளையத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

பதிவு செய்த நாள் : 05 மார்ச் 2021 19:35

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் காலத்தில் பொதுமக்கள் அச்சமில்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். 

ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில், ராஜபாளையம் சரகத்தைச் சேர்ந்த அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், நகரின் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் சென்றனர்.