தென்காசி அருகே தமிழக –கேரள எல்லையில் காய்கறி வியாபாரியிடம் ஆவணம் இன்றி இருந்த ரூ.1 லட்சம் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 18:27

தமிழக - கேரள எல்லை புளியரை சோதனைச்சாவடியில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர் .

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு சோதனைசாவடியிலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் இரண்டு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக-கேரளா எல்லையான  தென்காசி  மாவட்டம்  புளியரை சோதனைச்சாவடியில் காவல்துறையினர் மற்றும் துணைராணுவப்படையினர் நடத்திய வாகன சோதனையின் போது காய்கறி வியாபாரி ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணத்தை செங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கபட்டது. உரிய ஆவணம் அளித்த பின்னர் பணம் கொண்டுவந்த நபரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.