சட்டமன்ற தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார் . மேலும் தேர்தலுக்கு தேவையான வேட்பு மனு படிவம் நெல்லை வந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறும் நிலையில் தீவிர வாகன சோதனை, பொது மக்களிடையே அச்சத்தை போக்கும் வகையில் காவல்துறை கொடிஅணிவகுப்பு என தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொது மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், பணத்தை பெற்று கொண்டு வாக்களிக்க கூடாது வாக்காளர் அடையாள அட்டை, வாக்குசாவடி குறித்த சந்தேகங்களை கண்டறிவது என பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரா வாகத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார் . அந்த வாகனத்தில் பாடல் மற்றும் நாடகம் மூலம் பொது மக்களுககு விழிப்புணர் ஏற்படுத்தபடுகிறது.
அது போல் வரும் 12-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனையொட்டி நெல்லை மாவட்ட்ததில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வேட்புமனு விண்ணப்பமும் நெல்லை வந்தது அந்த படிவம் சென்னை, திருச்சி மற்றும் விருதாச்சலம் மாவட்டத்திள் உள்ள அரசு அச்சகங்களில் இருந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர் .