மீனவர்களுடன் குளிப்பது, மாணவர்களுடன் குஸ்தி என ராகுல்காந்தியின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது, மக்களுக்கு என்ன திட்டம் வைத்துள்ளேர்கள் என்பதை கூற வேண்டும் , நெல்லையில் குஷ்பு பேட்டி

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 22:23

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது, மீனவர்களுடன் குளிப்பது, மாணவர்களிடம் குஸ்தி என ராகுல்காந்தியின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது, மக்களுக்காக என்ன திட்டம் உள்ளது என்பதை சொல்லவேண்டும் என நெல்லையில்  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் நடிகை குஷ்பு நெல்லையில் தெரிவித்துள்ளார் .

நெல்லை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை தொடர்பாக நெல்லை வந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாஜக தேர்தல் பொறுப்பாளர் நடிகை குஷ்பு இங்கு செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது அவர் கூறுகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக –பாரதிய ஜனதா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது, மக்கள் மிக தெளிவாக உள்ளனர் . பாரதிய ஜனதா  அரசு தமிழக மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் தமிழக மக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்கை அறிவித்துள்ளது.  மத்தி அரசு மீதும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு மீதும் இதுவரை எந்தவிதமான ஊழல்குற்றச்சாட்டும் இல்லை எனவே மக்கள் மிகப்பெரிய வெற்றியை தர உள்ளார்கள் . கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தமிழகத்தில் பாரதிய ஜனதா எந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும் . பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பது குறித்து நிர்மலாசீத்தாராமன் பேசியுள்ளார் , விரைவில் குறைக்கப்படும் . பொதுவாக நிதி ஆண்டு இறுதியில் அல்லது தொடக்கத்தில் எரிபொருள் விலை உயர்வு இருக்கதான் செய்யும்...  மீனவர்களுடன் குளிப்பது, மாணவர்களிடம் குஸ்தி போடுவது  என ராகுல்காந்தியின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது, அது நல்ல தலைவருக்கும் அழகல்ல, மக்களுக்காக என்ன திட்டம் உள்ளது என்பதை சொல்லவேண்டும்  என கூறினார் .தமிழகத்தில் பெண் காவல்துறை அதிகாரி மீது சக உயர் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார் ,அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த பிரச்சனையில் அந்த அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது,  எனவும் தெரிவித்தார் .

இதனைத் தொடர்ந்து நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டவுண் பகுதியில் வெற்றிக் கொடி ஏற்றி வெல்வோம் தமிழகத்தை என்ற நிகழ்ச்சியில் மாபெரும் பேரணி குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணியினர் , பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள் பேரணி டவுண் சொக்கப்பனை முக்கில் இருந்து பாரதியார் தெரு, மவுண்சாலை, வாகையடி முனை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றன. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் நயினார்நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .