தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத சங்கரன்கோவில் நகராட்சியை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி ஊரில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதி பாட்டத்தூர் கிராமம் ஆகும். இங்கு 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அடிப்படை தேவையான கழிவு நீர் வாறுகால் வசதி, மயான எரிகூடம் அமைத்தல், அபாயகரமாக உள்ள ஊர் கிணற்றில் இரும்பு வளை அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகம் , மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராத அரசைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கிராமத்தில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர் .