நெல்லையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை ,

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 22:01

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

       தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற  ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத்  தொடர்ந்து  தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமுலுக்கு வந்தது.  அதன்படி அரசின் நலதிட்டங்கள் குறித்து விளம்பரங்கள், தலைவர்கள் சிலைகள் மறைப்பு  மற்றும் சுவர்களில்  அரசியல் கட்சிகளில் விளம்பரங்களை அழிக்கும் பணிகள்  தீவிரமாக நடந்து  வருகிறது

  இதுபோன்று நெல்லை மாவட்டத்தில் பணப்பட்டுவாடா. பரிசுப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை தடுக்க   ஐந்து தொகுதிகளில் 15 பறக்கும் படை, 15 நிலைக்கு குழு மற்றும் பத்து இதர  குழுவினர் என நாற்பது குழுவினர் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .  நெல்லை மேலப்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி அகதீஸ்வரன் தலைமையில் தீவிர வாகன சோதன நடைபெற்றது அதில் நான்கு சக்கர வாகனம் மட்டும் அல்லாது சந்தேகப்படுகூடிய இருசக்கர வாகனம் ஆட்டோ என அப்பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.