வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு , நெல்லையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 22:00

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லையில்  வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

வன்னியர்களின் வாக்கை மனதில் வைத்து அதிமுக அரசு அவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இதனால் சீர் மரபினர்கள் பாதிக்கப்படுகின்றனர் . எனவே இந்த ஒதுக்கீட்டை திரும்ப பெறக்கோரி சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நெல்லை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சிவசூரிய நாராயணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் , இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வலியறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர் . போராட்டத்தில் ஈடுபட்டனர்கள் கூறுகையில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படாத நிலையில் வன்னியர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது, இதனை அரசு முழுக்க முழுக்க வாக்கிற்காக செய்துள்ளது. சீர்மரப்பினருக்கு சாதிவாரி இட ஒதுக்கீட்டில் சமூக நீதி கொடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதற்கான விளைவுகளை அதிமுக சந்திக்கும் என தெரிவித்துள்ளனர் .