தோ்தல் தொடர்பாக வீடியோ எடுக்கும் பணியினை எங்களுக்கு வழங்க வேண்டும் , உள்ளுர் புகைப்பட கலைஞர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 21:59

வரும் சட்டமன்ற தேர்தல் பணியினை வீடியோ எடுக்கும் பணியினை அந்தந்த மாவட்ட  சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் , தனியாக ஒருநபருக்கு கொடுக்க கூடாது என வலியுறுத்தி நெல்லை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில்  வரும் சட்டமன்ற தேர்தல் பணியினை தனி நிறுவனம் , தனி நபர்களுக்கு வழங்காமல் , அந்ததந்த மாவட்ட போட்டோ வீடியோ சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி  அதன் மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர் .

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் மாவட்ட அளவில் போட்டோ வீடியோ எடுத்து தொழில் செய்து வருபவர்கள் கொரோனா ஊரடங்கால் தொழில் இழந்து கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . எனவே தேர்தல் வருவதால் அதற்கான பணியினை வீடியோ எடுக்க மாவட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும் , தனி நபர்கள் அல்லது தனி நிறுவனத்திற்கு வழங்கினால் தேர்தல் பணிகளுக்கு கேமராக்கள் கொடுக்காமல் தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளனர் .