சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம் , விவசாயிகள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 10:07

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார சூரியகாந்தி பயிர் நல்ல விளைச்சலால் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிய அடைந்துள்ளனர் .

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விவசாயத்தை பிரதான தொழிலாள கொண்ட பகுதியாகும் . இங்கு நெல்லை . வாழை , மக்காச்சோளம் மற்றும் காய்கறிப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. 

இந்நிலையைில் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கரிவலம்வந்தநல்லூர், கலிங்கப்பட்டி திருவேங்கடம், கரிசல்குளம், அழகாபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவாரி விவசாயத்தில் சூரியகாந்தி சுமார் 50 ஏக்கருக்கு   மேல் பயிரிடப்பட்டுள்ளது.  பயிர் நன்கு விளைச்சல் அடைந்து தற்போது அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அறுவடையான சூரிய காந்தி விரைகளை விவசாயிகள் சேமித்த வைத்துள்ளனர் . கடந்த ஆண்டு சூரிய காந்திக்கு போதிய விலை இல்லாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர் . எனவே தற்போது சூரிய காந்திக்கு நல்ல விலையை அரசு நிர்ணையிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .