நெல்லையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 18:56

திமுக, மதிமுக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளில்  இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

 இதில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள்  ஜெயக்குமார் தலைமையில்  பல்வேறு கட்சி இருந்து விலகி நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மகராஜன் முன்னிலையில் பாஜக.வில்  இணைந்தனர. 

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி,  தமிழ்ச்செல்வன்,  மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.