பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நெல்லை, சேரன்மகாதேவியில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 20:16

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்வை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெல்லை பாளையங்கோட்டை சேரன்மகாதேவியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

      பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் , பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாய விலையை குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர் .

 போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் , மாநில் வர்த்தக அணி இணை செயலாளர் கிரகம்பெல் தொண்டரணி மாநில் துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம் , உள்பட 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

இதுபோன்று மத்திய மாவட்ட திமுகா சார்பில் நெல்லை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .