விருதுநகர் பல் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அமைச்சர் நிதியுதவி

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 19:24

விருதுநகர்,

விருதுநகரைச் சேர்ந்த பல் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நிதியுதவி அளித்தார்.

விருதுநகர் வாடியான் தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் ஹேமா, அரசுப் பள்ளியில் பிளஸ்டூ படித்தவர். மாணவி ஹேமா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக அரசின் 7.5 சதவிகித சிறப்பு இட ஒதுக்கீட்டின் படி, பல் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. மாணவி ஹேமாவின் கல்வி செலவிற்காக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1 லட்சம் ரூபாய் உதவி தொகையாக வழங்கினார். 

நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளர் கதிரவன், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் துரைமுருகேசன், வர்த்தகர் அணிச் செயலாளர் ராதாகிருஷ்ணராஜா, திருத்தங்கல் நகரச்செயலாளர் பொன்சக்திவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.