கண்ணனூர் சி.எஸ்..ஐ. ஆலய அர்ப்பண விழா

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:23

கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நடந்தது. வேர்க்கிளம்பி அருகே கடமலைகுன்று சேகரம், கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபை புதிய ஆலய அர்ப்பண விழா, 200 வது ஆண்டு நிறைவு விழா, நினைவு தூண் அர்ப்பண விழா, சிறப்பு

 மலர் வெளியீட்டு விழா, புதிய பணித்தள அடிக்கல் நாட்டு விழா, அருட்பணியாளர் அர்ப்பண விழா, கிராம ஊழிய தொடக்க விழா நடந்தது. ஆலயத்தை பிஷப் செல்லையா  அர்ப்பணம் செய்தார். சேகர ஆயர் ஜார்ஜ் வேததாஸ் தலைமை வகித்தார். திருச்சபை ஆயர் லிபின்ராஜ், உதவி திருப்பணியாளர் ஜெயக்குமார் ஆமோஸ் முன்னிலை வகித்தனர். விழாவில் சபை பொறுப்பாளர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.