மணவாளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து காவடி பவனி திருச்செந்தூருக்கு 17ம் தேதி புறப்பட்டு செல்கிறது.
மணவாளக்குறிச்சி சேரமங்கலம் தென்திருவரங்கத்து ஆழ்வார் சுவாமி கோவிலில் 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி காவடி பூஜை நடந்து வருகிறது. 16ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜையும், 10.30 மணிக்கு பக்தர்களுக்கு வேல் தரித்தலும், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பஜனை, மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை, இரவு 7 மணிக்கு வேல் தரித்தல், இரவு 7.30 மணிக்கு திருக்காவடி பெரும் பூஜையும் நடக்கிறது. 17 ம் தேதி காலை 6.30 மணிக்கு காவடி பவனி சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு சேரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் பிற்பகல் 2 மணிக்கு புஷ்பக்காவடி மற்றும் வேல் காவடிகள் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு பிள்ளையார் கோவில் வழியாக மணவாளக்குறிச்சி செல்கிறது. மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் 16ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 4 மணிக்கு நையாண்டி மேளம், மாலை 6 மணிக்கு வேல் தரித்தல், இரவு 7 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு காவடி பெரும் பூஜை, இரவு 9 மணிக்கு அன்னதானம், இரவு 11 மணிக்கு காவடி அலங்காரமும் நடக்கிறது. 17 ம் தேதி காலை 6 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலிலிருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 3.30 மணிக்கு வேல் காவடி மற்றும் புஷ்பக் காவடிகள் கோவிலிலிருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, செல்கிறது. வடக்கன்பாகம் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் காவடி நிகழ்ச்சிகள் 16 மற்றும் 17ம் தேதி நடக்கிறது. 16 ம் தேதி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 3 மணிக்கு நையாண்டிமேளம், மாலை 6 மணிக்கு வேல் தரித்தல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 12 மணிக்கு காவடி பெரும் பூஜை மற்றும் காவடி அலங்காரம் நடக்கிறது. 17ம் தேதி காலை 6 மணிக்கு காவடி பவனி ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு வேல் காவடி மற்றும் புஷ்ப காவடி பவனி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சென்றடைகிறது. அங்கிருந்து அனைத்து காவடிகளும் புறப்பட்டு அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம், நாகர்கோவில் வழியாக திருச்செந்தூர் செல்கிறது.