தூண்டில் வளைவு கன்னியாகுமரி பங்குபேரவை தீர்மானம்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:07

கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு அமைக்க அரசை கேட்டு கன்னியாகுமரி பங்குபேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி துய அலங்கார உட்காரமாதா திருத்தல பங்குபேரவை கூட்டம் நடந்தது. இதில்  பங்குபேரவை துணைதலைவர் மைக்கேல் தலைமை வகித்தார். பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர், துணை பங்கு தந்தைகள் சுரேஷ், லெனின் பங்குபேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில்வளைவு அமைப்பதற்காக ஆய்வு பணிகள் செய்து காலதாமதமாகி வருகிறது. இந்த பணிகளை வரும் 21 ம் தேதி அன்று பணியை தொடங்காவிட்டால் 22 ம் தேதி போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், மேலும் காலதாமதம் ஆகும் நிலையில் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.