புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:06

கருங்கல் தூய சவேரியார் ஆலய வளாகத்தில் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.   குழித்துறை மறைமாவட்ட முழுவளர்ச்சி சமுக சேவைகள் இயக்கம், கிட்ஸ் எழுவோம் இயக்கம், காரித்தாஸ் இந்தியா, குலசேகரம்  மூகாம்பிகை புற்று நோய் மையம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்டறிதல் முகாமும், தூய சவேரியார் தாதியர் கல்லூரி மற்றும் சமூக ஆரோக்கிய முன்னேற்ற திட்டம் சார்பில் நடந்த  மருத்துவம் மற்றும் இயற்கை உணவு கண்காட்சி கருங்கல் தூய சவேரியார் ஆலய அரங்கில் நடந்தது. 

இயற்கை உணவு கண்காட்சியை தக்கலை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர்.சுஜய் திறந்து வைத்து பேசினார். மாத்திரவிளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை வகித்து பேசினார். சிபானா வரவேற்றார். கிட்ஜஸ் செயல் இயக்குனர் ஜாண் மைக்கேல் ராஜ் அறிமுகவுரையாற்றினார். குலசேகரம்  மூகாம்பிகை புற்று நோய் மைய டாக்டர் ராகுல் நம்பியார் புற்று நோய் பற்றி விளக்கி பேசினார். மேரி பிளவர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிட்ஸ் செயல் இயக்குனர் ஜாண் மைக்கேல் ராஜ், கிட்ஸ் திட்ட அலுவலர் மிக்கேலம்மாள், கிட்ஸ் எழுவோம் இயக்க ஒருங்கிணைப்பாளர் செலின் ஷீபா செய்திருந்தனர்.