மரத்திலிருந்து தவறிவிழுந்து முதியவர் பலி

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:05

இரணியல் அருகே மரம் முறிக்கும்போது தவறிவிழுந்த முதியவர் இறந்து போனார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

இரணியல் அருகே நெய்யூர் பிலாகோடைச் சேர்ந்த கோலப்பன் பிள்ளை மகன் முருகன்(58). மரம் வெட்டும் தெழில் செய்துவரும் இவர் சம்பவத்தன்று பாசிகுளத்தங்கரையில் மரம் வெட்டும் போது தவறி விழுந்து மயக்கமடைந்தார். அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இது சம்பந்தமாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.