மார்த்தாண்டத்தில் குப்பை மேடு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:04

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடி பகுதிகளில் குப்பைகள் தேங்கி வருகின்றன. மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஓரளவு குறைந்துள்ளது. 

மார்த்தாண்டம் வரும் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை மேம்பாலத்தின் அடியில் நிறுத்துகிறார்கள். இதனால் இருசக்கர பார்க்கிங் பிரச்னை குறைகிறது. பாலத்தின் அடியில் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சுகாதார கேடும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது. குப்பைகள் கழிவுகளை அகற்றும் நகராட்சி குப்பைகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.