வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு பொதுமக்கள் கவலை

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2021 17:03

குமரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.140 என விற்பனையாகிறது.இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தயாவின் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் 30 சதவிகிதம் உற்பத்தி செய்து முதலிடத்தை பிடிக்கிறது. மழை காலங்களில் வெங்காயம் அழுகி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. வெயில் காலங்களிலும் நஷ்டம் ஏற்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 16 சதவிகிதமும், கர்நாடாகாவில் 11 சதவிகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழகம் 1.2 சதவிகிதம் உற்பத்தி செய்கிறது. இங்கு ஜனவரி முதல் மே வரை சாகுபடி நடக்கிறது. குமரி மாவட்டத்தில் கடைகளில் சின்ன வெங்காயம் கி.140 என விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் கி.60 என விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தை தான் வீடுகளில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெரிய வெங்காயம் ஓட்டல்களில் அதிகம் பயன்படுகிறது. வெளிநாடுளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு வெங்காயம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். அரசு வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.