உலக முதியோர் தினம் : விழிப்புணர்வு பேரணி

பதிவு செய்த நாள் : 03 அக்டோபர் 2016 01:57


சென்னை

முதியோரின் நலனுக்காகவும் அரவணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் சென்னையில் மாபெரும் நடைபேரணி நேற்று நடைபெற்றது. இதில் மாணவர்கள், தொழிற் துறையினர், சமூக ஆர்வலர்கள், இல்லதரசிகள், இளைஞர்கள், முதியோர், குழந்தை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள முதியவர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை பற்றி சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்கவும் பிரண்ட்எண்டர்ஸ் பவுண்டேசன் மற்றும் ஹெல்த்அபவ்60 ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.