அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் பட்டியல் வழங்கல்.....

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 17:12

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சாமிக்காளை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் குறித்து விரிவாக பேசப்பட்டது. 

சாத்தூர் கிழக்கு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் தீர்மான பதிவேடு, உறுப்பினர் சேர்க்கை படிவம், அணி செயலாளர், துணை செயலாளர்கள், இணை செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிபாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் நகர, ஒன்றியப் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.