கயத்தாறில் கட்டபொம்மன் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

பதிவு செய்த நாள் : 03 ஜனவரி 2021 18:28

 கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது   கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் தினத்தில் நினைவிடத்திலுள்ள திரு உருவ சிலைக்கு தமிழகஅரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மணிமண்டபத்திலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அதன் பின்னர் துாக்கிலிடப்பட்ட நினைவு சின்னம் முன்பு மலர் துாவி மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஒ.விஜயா, தாசில்தார் பாஸ்கரன், ஆர்.ஐ.காசிராஜன், வி.ஏ.ஒ.கலைசெல்வி, பி.டி.ஓ சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.