ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 220 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:42

சென்னை, பெரியமேட்டில் ஆட்டோவில் குட்கா கடத்தி வந்த 2  நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 220 கிலோ ஹான்ஸ், குட்கா மற்றும் 2 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

சென்னை, பெரியமேடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில்பெரியமேடு போலீசார் விச், என் எச் ரோடு சந்திப்பில் கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 ஆட்டோக்களை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். ஆட்டோவுக்குள் சோதனை செய்த போது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து குட்காவை கடத்தி வந்த ஏழுகிணறைச் சேர்ந்த சித்திக் அலி (வயது 33), சையது முகமது (40) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 220 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சித்திக் அலி மற்றும் சையது முகமது ஆகிய 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.