மருங்கூர் பேரூராட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்.

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:27

மருங்கூர் பேரூராட்சி பகுதியில் பேரூர் அதிமுக சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்யவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

முகாமிற்கு மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், இரவிபுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன், அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜபாண்டியன்   முன்னிலை வகித்தனர்.

 அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன்  முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகி சத்தியமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் கணபதி, புஷ்பராஜ், ராஜப்பா, ஜென்சன்ரோச்,சந்திரசேகர் மகளிர் அணி கலா  கலந்து கொண்டனர்.