தூய செபஸ்தியார் பஜனை துவக்கம்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 17:18

செம்பருத்திவிளை தூய அந்தோணியார் ஆலயத்தில் தூய செபஸ்தியார் பஜனை துவங்கியது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னதாக துவக்கப்பட்ட  தூய செபஸ்தியார் பஜனை பலர் வாந்தி, பேதி, கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று போல் சரியான மருத்துவம், சாலை போக்கு வரத்து, மின்சார வசதிகள் குறைவான நேரம். 

இந்நிலையில் மக்களை தொற்றிக்கொண்ட வாந்தி, பேதி, கொள்ளை நோயால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பல இழப்புகளிலிருந்து மீள மக்கள் ஒன்று கூடி இறை வேண்டுதல் செய்ததுடன், தூய செபஸ்தியார் சப்பரத்தை பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் ஊர் முழுவதும் பவனியாக இறை வேண்டுதல் செய்ததுடன் பாடல்கள் பாடிய வண்ணம் இறை பற்றுடன் சென்றதன் பலனாக வாந்தி, பேதி நீங்கியதாக வரலாறு கூறுகிறது. அன்று  துவங்கிய பஜனை தொடர்ந்து எல்லா வருடமும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாள் வரை நடக்கிறது. இவ்வாண்டும் தூய செபஸ்தியார் பஜனை கார்த்திகை  1 ம் தேதி  துவங்கி நடந்து வருகிறது. துவக்க  விழாவில் பங்கு தந்தை ராபர்ட் ஜாண் கென்னடி தலைமையில் இணை பங்கு தந்தை அருள் ஜெகதீஸ் தூய செபஸ்தியார் சப்பரத்தை அர்ச்சித்து பவனியை துவக்கி வைத்தார். பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் கிரகோரி, செயலர் சுபா, பொருளர் ராஜேஸ் மோன், துணை செயலர் ஸ்டாலின் சேகர், மற்றும் பேரவையினர் முன்னிலை வகித்தனர். இதில் அன்பிய பொறுப்பாளர்கள்  மற்றும்         பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.