புதூர் முத்தாரம்மன் கோயிலில் கொலு பூஜை.

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 20:05

மணவாளக்குறிச்சி, அக்.17

கணபதிபுரம் புதூர் முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பூஜை நேற்று துவங்கியது. கணபதிபுரம் புதூர் முத்தாரம்மன் கோயில் 40வது நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பூஜை நேற்று துவங்கி பத்துநாட்கள் நடக்கிறது. 

காலை 7 மணிக்கு திருமுறை அமுதம், 9 மணிக்கு முளைபாரியிடுதல், 10 மணிக்கு கொலு வைத்தல், மாலை 5.30 மணிக்கு லலிதா ஸகஸ்ர நாம மாத்ரு சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் தினசரி காலை 8 மணிக்கு அபிஷேகமும் ஆராதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு ஆன்மீக பேருரை, 9 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. கடைசி நாளான 26ம் தேதி காலை 9.30 மணிக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.