சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 20:01

பேய்க்குளம், அக்.17

சாத்தான்குளம் அருகே மின்சாரம் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன. . சாத்தான்குளம் அருகே உள்ளது அமராவதி குளம் அழகம்மன் காலனி அமராவதி குளத்தில் சிறிதளவு தண்ணீர் உள்ளது .இக்கரையில் வழியாக அருகில் உள்ள பம்பு செட்டுகளுக்கு மின்சார வயர் செல்கிறது .இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தச்ச மொழி தெருவைச் சேர்ந்த கரையடி மணி, வாசுகி தர்மராஜ் ,வெற்றிவேல் ஆகியோர் தங்களது பசு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வராதது குறித்து தேடி அலைந்தனர்.  

இந்நிலையில் நேற்று காலையில் அமராவதி குளத்தில் மூன்று மாடுகளும் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது மின்சார வயர்கள் அறுந்து விழுந்து அதனை மிதித்த பசுமாடுகள் இறந்தது தெரியவந்தது.  இதுகுறித்து சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர் .தகவலின் பேரில் சாத்தான்குளம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து பார்த்தனர்.  உடனடியாக மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டது. 

விசாரணையில் வழக்கம் போல மாடுகள் மேய்ந்து விட்டு குளத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்துள்ளது. அப்போது காற்றில் மின்சார ஒயர் அறுந்து விழுந்து 3 பசு மாடுகள் இறந்து போனது தெரியவந்தது. மூன்று பசு மாட்டின் விலை சுமார் ஒரு லட்சம்ஆகும்.  இச்சம்பவம் குறித்து இறந்து போன மாடுகளின் உரிமையாளர்கள் அரசிடம் நிவாரண நிதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர் .