அண்ணனை பாட்டிலால் தாக்கி படுகொலை தம்பி கைது

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:30

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம், கூரை பள்ளிக்கூடம் தெருவில் வசித்து வந்தவர் கல்யாணகுமார்.

 இவரது தம்பி முருகன் (30). நேற்று இரவு போதையில் இருந்த முருகனுக்கும், கல்யாணகுமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த முருகன், மது பாட்டிலால் தனது அண்ணனை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த கல்யாணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவம் கேள்விப்பட்ட தளவாய்புரம் போலீசார் இறந்து கிடந்த கல்யாண குமாரின் உடலை, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் அருகிலேயே பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்