இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:30

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு புறநகர் மாவட்ட செயலாளர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு குழு செயலாளர் நாகேஷ்வரன் முன்னிலை வகித்தார். 

மாவட்ட தலைவர் சோலை கண்ணன், மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் கொண்டையம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பெரியதம்புரான் கோவிலுக்கு அருகே செயல்பட்டு வரும் மதுபானக் கடையை உடனே அகற்ற வலியுறுத்தியும், அரசின் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பொது இடங்களில் பயன்படுத்துவதை அரசு பறிமுதல் செய்யக் கோரியும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அங்குள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியதம்புரான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் சோழவந்தான் தொகுதி தலைவர் துரைபாண்டி, துணைத் தலைவர் சுரேஷ் சேட்டு, ஒன்றிய செயலாளர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.