மதுரை மாணவி நேத்ரா : நன்கொடையாக வந்த 4 லட்ச ரூபாயை ஏழைகளுக்கு உதவி..!

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:23

நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வறுமையில் வாடிய பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்து தொடர்ந்து,மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் தன்னுடைய மகள் நேத்தராவின் எதிர்காலத்திற்கு சேமித்து வைத்த ஐந்து லட்ச பணத்தை எடுத்து நிவாரண பொருட்கள் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்தார்,இந்த சம்பவம் எதிரொலியாக பிரதமர் மோடி, முதலமைச்சர்,ஆளுநர் என அனைத்து தரப்பினரும் பாராட்டினர்,

அதனை தொடர்ந்து பல தன்னார்வலர்கள் தானாக முன்வந்து மாணவி எதிர்காலத்திற்காக சுமார் 4 லட்ச ரூபாய் அளவிற்கு நன்கொடை வழங்கினார். மாணவி நேத்ரா அந்தப் பணத்தையும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் மூலம் உதவி செய்து உள்ளார்,எதிர்காலத்திற்காக தன்னார்வலர்கள் கொடுத்த பணத்தையும் ஏழை மக்களுக்கு உதவ முன்வந்த நேத்ராவின் செயல் அனைவர் மத்தியிலும் பாராட்ட தக்கதாக அமைந்துள்ளது,மாவட்ட குழந்தைகள் நல குழு சார்பாக இன்று மானவி நேத்ராவை சந்தித்து பாராட்டு சான்றிதழும் பதக்கமும் டாக்டர் விஜய் சரவணன் வழங்கினார்.