வழக்கறிஞரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய காவல் உதவி ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் நெல்லையில் வழக்கறிஞர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 21:29

நெல்லையில் வழக்கறிஞரை துப்பாக்கி காட்டி மிரட்டிய காவல் உதவி ஆய்வாளரை  கைது செய்ய வேண்டும் மற்றும் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் இசக்கிப்பாண்டி என்பவரை தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா என்பவர் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் அவர் மீது  இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இருந்த போதிலும் அவரை கைது செய்யவில்லை துறைரீதியான நடவடிக்கையும்  எடுக்கவில்லை இதனைக்  கண்டித்து நெல்லையில் வழக்கறிஞர் சங்கத் தலைவர்  சிவசூரிய நாராயணன் தலைமையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் அவரை கைது செய்வதோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர் அவ்வாறு தமிழக அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள்  போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர் . போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்