கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த நபர் கைது

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 21:25

நெல்லை சுத்தமல்லி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சுத்தமல்லி போலீசார் கைது செய்தனர் .

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நெல்லை மாவட்டம்  சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   கோபாலசமுத்திரம் செல்லும் பிரதான சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்  மற்றும் இப்ராஹிம் ராஜா  ஆகியோரை பிடிக்க சென்ற போது சுரேஷ் கைது செய்யப்பட்டு, இப்ராஹிம் ராஜா தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் குமாரிசித்ரா தலைமையில் சுத்தமல்லி காவல்துறையினர் இப்ராஹிம் ராஜாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரை  பெரியார் நகர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.பின்பு அவரை காவல் நிலையம் அழைத்து வந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.