கணவன் மனைவி மீது தாக்கு இருவர் மீது வழக்கு.

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 19:09

ஆரல்வாய்மொழியில் முன்விரோதம் காரணமாக கணவன் மனைவியை தாக்கிய இருவர் மீது வழக்கு.

இதுக்குறித்து போலீஸ் தரப்பில்  கூறுவது :

ஆரல்வாய்மொழி முத்துநகர் செல்வராஜ் மகன் குமார் 42. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகேஷ்க்கும் இடையே அப்பகுதியில் ஆட்டோ நிறுத்தம் அமைப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. சம்பவதன்று முகேஷ் அவரது நண்பர் திசையன்விளை பால்ராஜ் உடன் சென்று குமார் மற்றும் அவரது மனைவி பேரின்பமேரி 40 ஆகிய இருவரையும் தரக்குறைவாக பேசி கைகொண்டு தாக்கி உள்ளதாக ஆரல்வாய்மொழி போலீஸிடம் குமார் புகார் செய்தார்.  புகார் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை நடக்கிறது.