பைக் மோதி மூதாட்டி படுகாயம்

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 18:50

நாகர்கோவில் அருகே ரோட்டை கடக்கும் போது பைக் மோதி மூதாட்டி படுகாயமடைந்தார். இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது ,

நாகர்கோவில் அருகே தெற்கு திருப்பதிசாரத்தைச் சேர்ந்த கந்தசாமி மனைவி பொன்னம்மாள் (70). சம்பவத்தன்று இவர் தேரேகால்புதூர் நாஞ்சில் நகர் அருகே ரோட்டைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக வெள்ளமடத்திலிருந்து ஒழுகினசேரி நோக்கி வந்த மோட்டார் பைக் பொன்னம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் மோட்டார் பைக் ஓட்டி வந்த அழகியபாண்டியபுரம் மேல்கரையைச் சேர்ந்த கணேசன் மகன் அரி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.