திருச்செந்தூர்முருகன் கோவிலில் ஆவணி திருவிழா

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2020 18:46

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 7ம் திருநாளான   அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.

அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின்னர், சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் கோவில் உள்துறை அலுவலகம் முன்பு வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் சுவாமி அம்பாள்களுடன் கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்து, 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளி சுவாமி க்கு மகா தீபாராதனை நடந்தது.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் அலங்காரமாகி இருந்த சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை  அம்பாள்களுக்கு மாலை 4 மணிக்கு மகா தீபாராதனை  நடந்தது.

 அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார். கொரானா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழுவதும் கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு  அனுமதிக்கப்படவில்லை.

 8ம் திருநாள் ஞாயிறு அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 11.30 மணிக்கு சுவாமி பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வருகிறார்.. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்