விவசாய கண்காட்சி மற்றும் பயிர் மருத்துவ முகாம்.

பதிவு செய்த நாள் : 09 செப்டம்பர் 2020 14:08

புதுக்கோட்டை :

எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மரம் அறக்கட்டளை சார்பில் விவசாய கண்காட்சி மற்றும் பயிர் மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை அருகே மூக்கம்பட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் தலைமை வகித்து விவசாய கண்காட்சி மற்றும் பயிர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்களுக்கு முன்பு வீசிய கஜா புயலில் பல லட்சம் மரங்களை வேரோடு சாய்ந்தது.


இதனால் புதுக்கோட்டை  மாவட்டத்தை மீண்டும் பசுமையான மாவட்டமாக  மாற்றும் நோக்கத்தில்  கஜா புயலால் சாய்ந்த மரங்களுக்கு பதிலாக அதே இடத்தில் மீண்டும் மரங்களை நடும் முயற்சியாக  புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை மற்றும் எம்எஸ் சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த விவசாய கண்காட்சி மற்றும் பயிர் மருத்துவ முகாமை நடத்துகின்றது. புதுக்கோட்டை மரம் அறக்கட்டளை சார்பில் மூக்கம்பட்டி ஊராட்சிக்கு பல்வேறு மூலிகை மரக்கன்றுகள் அரச மரகன்றுகள் என 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் மரம் அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர் என்றார்.


இவ்விழாவில் கலந்து கொண்ட நூறு நாள் வேலை திட்டத்தில்  வேலை பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மரக்கன்றுகளை குழந்தை போல் நினைத்து வளர்த்து இந்த ஊருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்போம் என உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மரம். அறக்கட்டளை தலைவர் ராஜா. எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், நேரு யுவகேந்திரா நிர்வாகிகள் மூக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி ரங்கநாயகி விநாயகமூர்த்தி  நூறு நாள் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.