குற்றாலத்தில் அருவி கொட்டுது ஐந்தருவி தண்ணீரில் சிக்கி காட்டுப்பன்றி பலி

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2020 13:19

பாளையங்கோட்டை . ஆக    04

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்கலாகும் . இந்த சீசன் காலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் . இந்நிலையில் இந்த ஆண்டு சீசன் சரிவர தொடங்காத நிலையில் கடந்த மூன்று நாட்களாக சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது. 

இந்நி்லையில்  தமிழகத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ( 4-ம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் இன்று முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்றும், இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

அதன்படி நேற்று . நள்ளிரவு முதல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்  இன்று காலை முதல் குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து  பாதுகாப்பு வளைவையும் தாண்டி விழுகிறது.  இதுபோன்று ஐந்தருவி , பழையகுற்றாலம் , புலி அருவி உள்ளிட்ட அருவிகளிலும் நீர் அதிகரித்து விழுகிறது. ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை உள்ளதால் , அருவிகள் ஆர்ப்பரித்தும் சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.