கொரோனா தடுப்பு சித்த மருத்துவ மருந்து வழங்கல்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 18:34

நாகர்கோவில் சித்த மருத்துவர் எம்.எஸ்.எஸ் ஆசான் பதினான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.எஸ்.எஸ் ஆசான் அன் சன் நிறுவனம்  கொரோனா நோய்க்கான இலவச சித்த மருந்துகளை வழங்கினர். 

நிகழ்ச்சியில் எம்.எஸ்.எஸ் ஆசான் அன் சன் உரிமையாளர் மகாலிங்கம்  பிரகாஷ், டாக்டர் விக்னேஷ், சிக்மா ஹெர்பல் ரெமடீஸ் நிறுவன உரிமையாளர் ஜெயந்தி, சக்தி பீட தலைவர் சின்னதம்பி முன்னிலை வகித்தனர். சக்திபீடம் சார்பில்  கபசுர குடிநீர், நெல்லிக்காய் லேகியம், முககவசம் ஆகியவற்றை மகாலிங்கம்   என்ற பிரகாஷ் வழங்கினார். ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு, வரலெட்சுமி பூஜை நடந்தது.  வீடு வீடாகச் சென்று  இலவச கொரோனா நோய்த்தடுப்பு சித்த மருத்துவ மருந்துகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.