திருவட்டார் கொரோனா முகாமில் இருந்த ஒருவர் பலி

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 18:33

திருவிதாங்கோடு செட்டியார் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜா 54 இவர் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணி புரிந்து வந்ததாக தெரிகிறது. 

இவருக்கு  விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.  அவர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் சொந்த ஊரான குமரிக்கு வந்தார். இங்கு அவரை  களியக்காவிளையில் உள்ள கொரோனா தடுப்பு சோதனை முகாமிற்கு கொண்டு சென்றனர். 


அங்கு அவருக்கு சளி மாதிரி எடுத்து விட்டு அங்கிருந்த அதிகாரிகள் முகாமில் தங்க உத்தரவு இட்டனர்.  ராஜா எனக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டதால் தான் ஊருக்கு வந்தேன் என்னை சிகிட்சைக்காக ஆஸ்பத்திரி அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளார்.  பணியில் இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்து முடியாது நீங்கள் முகாமில் தங்கிவிட்டு தான்   செல்ல முடியும் என்று கூறி திருவட்டாரில் உள்ள கொரோனா முகாமில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.  அவரின் உடல் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜா கொரோனாவால் இறந்தாரா அல்லது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிட்சை இல்லாமல் இறந்தாரா என்பது குறித்து அப்பகுதி மக்களிடமும் மற்றும் முகாமில் இருந்த மற்ற நபர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.